ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள சுற்றுலாத் தலத்தில் படகு சவாரி மிகவும் பிரபலமான ஒன்று. பொங்கல் விடுமுறையையொட்டி ஏராளமானோர் அங்கு சென்று படகு சவாரி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை தொண்டி அருகே உள்ள உசிலனகோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஏழு பெரியவர்கள், மூன்று குழந்தைகள் என பத்து பேர் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் படகு சவாரி செய்துள்ளனர். அப்போது ஏதிர்பாராவிதமாக படகு கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது.
இதில் ஒன்பது பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், செல்வராஜ் என்பவரின் மகன் விஸ்வ அஜித் (5) மட்டும் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: பொங்கல் விழாவை படகு போட்டியுடன் கொண்டாடிய மீனவர்கள்!