ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை: குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

ராமநாதபுரம்: முன்விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில், ஏழு பேரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்துள்ளனர்.

அருண் பிரகாஷ்
அருண் பிரகாஷ்
author img

By

Published : Sep 16, 2020, 8:29 PM IST

ராமநாதபுரம் வசந்தநகர் பகுதியைச் சேர்ந்த அருண் பிரகாஷ் என்ற இளைஞர், ஆகஸ்ட் 31ஆம் தேதி 10 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு கேணிக்கரை காவல் நிலையத்தில் ஏழு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், முக்கிய குற்றவாளி சேக்(எ)லெப்ட் சேக் உள்ளிட்ட நான்கு பேர் திருச்சி லால்குடி நீதிமன்றத்திலும், இருவர் அருப்புக்கோட்டை நீதிமன்றத்திலும் ஒருவர் கடலாடி நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஹரன் (எ) ஹரிஹரன் என்பவர் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரியவந்து. அவரை செப்டம்பர் 8ஆம் தேதி கைது செய்து அவரிடமிருந்து இருசக்கர வாகனம், செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கொலைக்கு பயன்படுத்திய கத்திகள், செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. இந்த வழக்கு சம்பந்தமாக சரண் அடைந்த, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விசாரணை செய்ததில், வசந்தநகரில் அருண் பிரகாஷ், காமாட்சி, யோகேஷ்வரன், பாண்டியராஜன் ஆகியோர் நின்று கொண்டிருந்தபோது அவர்களுக்கு எதிரில் வைகை நகர் சரவணன் (எ) வெள்ளை சரவணன், சபீக் ரகுமான் ஆகிய இருவரும் வந்துள்ளனர்.

அவர்களுடன் ஏற்கனவே காமாட்சி, அருண்பிரகாஷ் தரப்பினருக்கு முன்பகை இருந்ததால் இருவரையும் "எங்க ஏரியாவுக்கு ஏன் வருகிறீர்கள்" என சத்தம் போட்டு சரவணன், சபீக் ரகுமானையும் அடித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த தனிப்பட்ட முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டே ஷேக் (எ) லெப்ட் ஷேக், எலி விஜய் உள்ளிட்டவர்கள் காமாட்சியை தாக்கும் பொருட்டு சம்பவ இடத்திற்கு வந்த போது காமாட்சி தப்பி ஓடியுள்ளார்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த அருண் பிரகாஷை கத்தியால் குத்தி கொலை செய்தும், யோகேஷ்வரன் என்பவரை கத்தியால் காயப்படுத்தியும் உள்ளனர். இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஏழு பேரை கைது செய்வதற்கு காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், ராமநாதபுரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.