ETV Bharat / state

சமூக வலைதளத்தில் காவல் துறையினரை திட்டிய அஜித் ரசிகர் கைது - Ramanathapuram Helmet Awareness

ராமநாதபுரம்: சமூக வலைதளத்தில் காவல் துறையினரை திட்டிய அஜித் ரசிகர் கைது செய்யப்பட்டார்.

காவல் துறையினரை திட்டிய அஜீத் ரசிகர்
காவல் துறையினரை திட்டிய அஜீத் ரசிகர்
author img

By

Published : Mar 5, 2020, 11:06 PM IST

Updated : Mar 5, 2020, 11:43 PM IST

ராமநாதபுரம் காவல் துறையினர் முகநூல், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் சேமிப்பு, காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும், இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிய வேண்டும், ஏடிஎம் எண்ணை யாரிடமும் பகிரக் கூடாது போன்ற விழிப்புணர்வை சினிமா பிரபலங்களை வைத்து செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் காவல் துறையினரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிப்ரவரி 13ஆம் தேதி நடிகர் விஜயை வைத்து ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "புல்லிங்கோ எல்லாரும் பைக்கில் செல்லும்போது ஹெல்மெட் போட வேண்டும் " என பதிவிட்டிருந்தனர். இதைப் பார்த்த திருவண்ணாமலை ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த அஜீத் ரசிகர் கார்த்திக் என்பவர் அந்த பதிவை திட்டி அசிங்கமாக கருத்தை பதிவு செய்தார்.

காவல் துறையினரை திட்டிய அஜீத் ரசிகர்

பின்னர் காவல் துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க: சினிமாவில் 25ஆவது ஆண்டில் மாஃபியாவாக களமிறங்கும் அருண் விஜய்!

Last Updated : Mar 5, 2020, 11:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.