ETV Bharat / state

தனியார் பள்ளியில் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் அரசு பள்ளியில் சாதனை! - இராமநாதபுரம் தேர்வில் முதல் இடம்

ராமநாதபுரம்: தனியார் பள்ளிகளில் நிராகரிக்கப்பட்ட மாணவர்களை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெறச் செய்து சாதித்து காட்டி இருக்கிறோம் என்று அரசு பள்ளி ஆசிரியர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.

பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி ஜீவலெட்சுமி
author img

By

Published : Apr 30, 2019, 8:33 PM IST

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், ராமநாதபுரம் மாவட்டம் 98.48% பெற்று மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ராமநாதபுரத்தில் தேர்வு எழுதிய 16623 மாணவர்களில் 16370 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

ஒட்டுமொத்தமாக 98.26 சதவீதம் பெற்று மாநில அளவில் ராமநாதபுரம் அரசு பள்ளியில் முதல் இடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தியது. அரசு பள்ளிகளில் 131 பள்ளிகளில் 94 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சியை காட்டிவுள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விசுவாசம் கூறிய பொழுது,

பல தனியார் பள்ளிகளால் நிராகரிக்கப்பட்ட மாணவர்களை தங்களின் பள்ளியில் சேர்த்து தேர்ச்சி அடையச் செய்து சாதித்து காட்டி இருப்பதாகவும், பின்தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்ற இருப்பதாகவும் அதை பின்னுக்கு செல்ல விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

தனியார் பள்ளியில் நிராகரிக்கப்பட்ட மாணவர்கள் அரசு பள்ளிகளில் சாதனை!

அதே பள்ளியில் 451 பெற்று முதலிடம் பிடித்த மாணவி ஜீவலட்சுமி கூறியதாவது, தங்கள் பள்ளியில் ஆசிரியர்களின் முயற்சியாலும் மாணவர்கள் ஒத்துழைப்பே இந்த தேர்ச்சி விகிதத்தை தங்களால் காட்ட முடிந்தது. தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளே மாணவர்களை கனிவுடன் கவனித்துக் கொள்வதாகவும் அரசுப் பள்ளிகளே சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Intro:இராமநாதபுரம்
ஏப்ரல். 30

தனியார் பள்ளிகளில் நிராகிக்கப்பட்ட மாணவர்களை வெற்றி பெறச் செய்து சாதித்து காட்டி இருக்கிறோம் அரசு பள்ளி ஆசிரியர்கள்.

Body:நேற்றைய தினம் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில், இராமநாதபுரத்தில் தேர்வு எழுதிய 16623 மாணவர்களில் 16370 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

இதில், மாணவர்கள் 8801 மாணவிகள் 8289 ஆக இருந்தது. தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்து அளவு 98.48% ஆகவும் பெற்று மாநில அளவில் ராமநாதபுரம் மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பிடித்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதே நேரத்தில் அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை மாவட்டத்திலுள்ள 131 பள்ளிகளில் 94 பள்ளிகள் முழுத் தேர்ச்சி விதத்தையும் கொடுத்தனர். ஒட்டுமொத்தமாக 98.26 சதவீதம் பெற்று மாநில அளவில் ராமநாதபுரம் அரசு பள்ளியில் முதல் இடத்தை பிடித்து சாதனை நிகழ்த்தியது.

மாவட்டத்தைப் பொருத்தவரை மாவட்டத்தில் உள்ள 255 பள்ளிகளில் 178 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

அரசு பள்ளிகளில் பார்க்கும்பொழுது 131 பள்ளிகளில் 94 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி காட்டினர்.

இதில் தேர்வு எழுதிய 5757 மாணவர்களில் 5687 மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விசுவாசம் கூறிய பொழுது

பல தனியார் பள்ளிகளால் நிராகரிக்கப்பட்ட மாணவர்களை தங்களின் பள்ளியில் சேர்த்து தேர்ச்சி அடையச் செய்து சாதித்து காட்டி இருப்பதாகவும்,

பின்தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை கல்வியில் முன்னேற்ற இருப்பதாகவும் அதை பின்னுக்கு செல்ல விடமாட்டோம் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஆசிரியர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து மாணவர்களுக்கு காலை மாலை என இரு வேளைகளும் சிறப்பு வகுப்புகள் நடத்தி படிப்பில் சற்று குறைவாக இருக்கும் மாணவர்களுக்கு திறனாய்வுத் தேர்வுகள் அதிகம் நடத்தியும் அவர்களை தேர்ச்சி அடைய செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் உயர்ந்து இருப்பதாகவும் அவர் கூறினார்.

அதே பள்ளியில் 451 பெற்று முதலிடம் பிடித்த மாணவி ஜீவலெட்சுமி பேசிய பொழுது தங்கள் பள்ளியில் ஆசிரியர்களின் முயற்சியாலும் மாணவர்கள் ஒத்துழைப்புமே இந்த தேர்ச்சி விகிதத்தை தங்களால் காட்ட முடிந்தது. அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளை விட மிகவும் மாணவர்களை கனிவுடன் கவனித்துக் கொள்வதாகவும் அரசுப் பள்ளிகளே சிறந்து விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

அவருடைய தந்தை குமரேசன் கூறியபொழுது வசதி வாய்ப்பற்றவர்கள் தனியார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க இயலாத காரணத்தால் அரசு பள்ளியில் சேர்த்தோம்.

ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளை மிகவும் கவனித்துக்கொண்டு படிக்க வைத்ததாகவும் இதனாலேயே தனது மகள் சாதித்துக் காட்டி இருப்பதாகவும் பெற்றோர்கள் அரசுப் பள்ளியை நாட வேண்டும் என்றும் தனியார் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவதை கைவிட வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சிறப்பு கவனம் செலுத்தவேண்டிய மாவட்டமாக இருந்த ராமநாதபுரம் மாவட்டம் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் அரசுப் பள்ளிகள் மாநிலத்தையே கவரும் விதமாக சிறப்பாக செயல்பட்டது. இந்த பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காட்டுகின்றன. இதே தொடர்ந்து நிகழ வேண்டும் என்பதே ஆசிரியர்கள் பெற்றோர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் எண்ணமாக உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.