ராமநாதபுரம் சின்ன கடைப்பகுதியில் தடைசெய்யப்பட்ட, அஸ்ஸாம் மாநில லாட்டரி சீட்டு விற்பனை செய்துவந்த தர்மராஜ் என்பவரை கேணிக்கரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.
அவரிடமிருந்து 10 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள், 80 ஆயிரத்து 500 ரூபாய், கைப்பேசி, இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல்செய்துள்ளனர்.
இந்தச் சட்டவிரோத லாட்டரி சீட்டு விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்குத் தடைவிதித்திருந்தது.
இந்நிலையில், அதிக ரூபாய் மதிப்பிலான அஸ்ஸாம் மாநில லாட்டரி சீட்டுகளும், கட்டுக்கட்டாக ரொக்கப் பணமும் பறிமுதல்செய்யப்பட்டது பொதுமக்கள் மட்டுமல்லாது காவல் துறை மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத பேருந்து பறிமுதல்