ETV Bharat / state

புரெவி புயல் பாதிப்பு: ராமநாதபுரத்தில் மத்திய குழு ஆய்வு - புரெவி புயல் பாதிப்பு-மத்திய குழு ஆய்வு

ராமநாதபுரம்: புரெவி புயலால் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ராமேஸ்வரத்தில் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 8 பேர் கொண்ட மத்திய குழு அலுவலர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.

புரெவி புயல் பாதிப்பு ஆய்வு
புரெவி புயல் பாதிப்பு ஆய்வு
author img

By

Published : Dec 29, 2020, 10:12 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ராமேஸ்வரத்தில் தனியார் விடுதியில் உள்ள கூட்ட அரங்கில், மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சார்ந்த 8 பேர் கொண்ட மத்திய ஆய்வுக் குழு அலுவலர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.

ராமநாதபுரத்தில் 8 பேர் கொண்ட மத்திய குழு ஆய்வு

இதில், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி முன்னிலையில் ஆய்வுமேற்கொண்டனர். இந்த, ஆய்வின்போது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உடனிருந்தார்.

அண்மையில் தென் வங்கக்கடலில் உருவான புரெவி புயல் தென் தமிழ்நாட்டில் கரையைக் கடந்தது. இதன் காரணமாகத் தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததன் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

புரெவி புயல் பாதிப்பு-மத்திய குழு ஆய்வு
புரெவி புயல் பாதிப்பு-மத்திய குழு ஆய்வு

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வுசெய்வதற்காக மத்திய அரசின் மூலம் மத்திய உள் துறை அமைச்சக இணைச் செயலாளர் அசுதோஷ் அக்னிகோத்ரி, மத்திய வேளாண்மைத் துறை அமைச்சக இயக்குநர் டாக்டர் மனோகரன், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சக மண்டல அலுவலர் ரனன்ஜெய் சிங், மத்திய நிதித்துறை அமைச்சகம் துணை இயக்குநர் அமித் குமார், மத்திய மின்சார ஆணையம் உதவி இயக்குநர் சுபம் கார்க், மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் உதவி ஆணையாளர் மோகித் ராம், மத்திய மீன்வளத் துறை ஆணையர் டாக்டர் பால் பாண்டியன் உள்ளிட்ட 8 பேர் அடங்கிய அலுவலர்கள் குழுவிடம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புரெவி புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அவர்களிடம் விளக்கிக் கூறினார்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.