ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மூன்றாம் எண் ரேஷன் கடையில் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர். இன்று விநியோகம் செய்த ரேஷன் அரிசி தரமற்றதாக இருந்ததால் ரேஷன் கடையின் முன்பு அரிசியை சாலையில் கொட்டி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரேஷனில் கொடுக்கப்படும் அரிசியின் அளவு குறைவாக இருப்பதாகவும், சர்க்கரை 2 கிலோவுக்கு ஒன்றரை கிலோ கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கின்றனர். மேலும் ரேஷன் பொருட்களை மாதத்தில் ஒரு நாளில் இரண்டு மணி நேரம் மட்டுமே வழங்குகின்றனர். அந்த நேரத்தில் அந்தப் பொருட்களை வாங்காமல் விட்டால் அடுத்த நாள் பொருள் வழங்குவது கிடையாது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கமுதி ஆய்வாளர் அன்பு பிரகாஷ் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் தென்னரசு ஆகியோர் நாளை தரமான அரிசி வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சாலையில் கொட்டப்பட்ட அரிசி ரேஷன் கடைகாரர் மூலம் அள்ளப்பட்டது.
இதையும் படிங்க:ரேஷன் அட்டைகளில் என்.பி.எச்.எச். முறையை ரத்து செய்யக் கோரி குமரியில் போராட்டம்!