ராமநாதபுரம் மாவட்டம் எக்ககுடி கிராமத்துக்குட்பட்ட கண்மாய் மூலம் 250 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த கண்மாய் தண்ணீர் சில தினங்களுக்கு முன் பச்சை நிறமாக மாறியது.
இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு முன் இதேபோன்று ஆனைகுடி சுத்திகரிப்பு நீர் கலந்ததால் நிறம் மாறியது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியினர் அச்சத்தில் தண்ணீரை பயன்படுத்தாமல் உள்ளனர். தற்போது இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிம்ஸ் பூங்காவில் நிறம் மாறிய மேப்பிள் மரத்தின் இலைகள்!