ராமநாதபுரத்தில் கரோனா தொற்றின் பரவல் வேகமெடுத்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாவட்ட ஊரக வளர்ச்சி சார்பில் மாவட்ட மருந்து ஆய்வாளர் பிரபு மேற்பார்வையில், 3 மருந்தாளுனர்கள், மகளிர் குழுவினர் மூலம் சானிடைசர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மருந்து ஆய்வாளர் பிரபு, ஏற்கனவே 1,000 லிட்டர் சானிடைசர் தயாரித்து 200 பாட்டில்களில் அடைக்கப்பட்டு வைத்துள்ளதாகவும், தற்போது இரண்டாவது கட்டமாக 1,000 லிட்டர் சானிடைசர் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.
இவை அரசு அலுவலகங்கள், சுகாதார மையங்கள், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், சுகாதாரப் பணியாளர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறினார்.
மேலும், வெளிச் சந்தையில் ஒரு லிட்டர் சானிடைசர் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும், அரசின் மூலம் தயாரிப்பதால் 200 ரூபாய் மட்டுமே செலவாகும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு 216 கோடி டோஸ்கள் ஸ்புட்னிக் v தடுப்பூசி