ETV Bharat / state

வயிற்று வலியால் துடித்த கர்ப்பிணிக்கு உதவிய காவல் துறை - குவியும் பாராட்டு! - வயிற்று வலியால் துடித்த கர்பிணி

ராமநாதபுரம்: ரெகுநாதபுரம் பகுதியில் வயிற்று வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, வழிவகை செய்த காவல் துறையினருக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

police-support-for-pregnant-woman-with-abdominal-pain

author img

By

Published : Apr 18, 2020, 8:58 PM IST

இராமநாதபுர மாவட்டம், ரெகுநாதபுரத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. எனவே, இராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்குச் செல்ல உறவினர்கள் ஆட்டோவை அழைத்தனர். ஆனால் தடையை மீறி செல்ல முடியாது என ஆட்டோ டிரைவர் மறுத்துள்ளார். எனினும் கர்ப்பிணி என்பதால், மனம் கேட்காத அந்த ஆட்டோ டிரைவர், திருப்புல்லாணி துணை காவல் ஆய்வாளர் வசந்தகுமாரின் செல் நம்பரை கொடுத்தார். பின், விபரத்தைக் கூறி அனுமதி கேட்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் துணைக்காவல் ஆய்வாளரைத் தொடர்பு கொண்டு விபரத்தைக் கூறியதும், கர்ப்பிணியை அழைத்துச்செல்ல ஆட்டோ ஓட்டுநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பின் மருத்துவமனைக்கு வந்ததும் அப்பெண், ஆட்டோ ஓட்டுநரை அனுப்பி வைத்துள்ளார். அப்பெண்ணிற்கு சிகிச்சையளித்த மருத்துவர், ‘இது சூடு காரணமாக ஏற்பட்ட வலி மட்டுமே, பிரசவ வலி கிடையாது’ எனக்கூறியுள்ளார்.

இதையடுத்து மீண்டும் துணை காவல் ஆய்வாளரிடம் தகவல் கொடுத்ததையடுத்து, வசந்தகுமார் மீண்டும் ஒரு ஆட்டோவை ஏற்பாடு செய்து கர்ப்பிணி பெண்ணை பத்திரமாக வீட்டிற்கு அழைத்துச்செல்ல உத்தரவிட்டார். காவல் துறையினரின் இந்த நெகிழ்ச்சி சம்பவம் ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டைப் பெற்று வருகிறது.

இதையும் படிங்க:ஆறுகளில் மாசு குறைந்தது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.