ராமநாதபுரம்: தொண்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு இன்று (ஜூலை 20) மஞ்சள் கடத்த இருப்பதாக கடலோர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து கடற்கரை பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு கடத்த ஏழு மூட்டைகளில் ஆட்டோவில் எடுத்து வரப்பட்ட சமையல் மஞ்சளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தல்காரர்கள் நான்கு பேரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் தொண்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த கலந்தர் அலி, வடக்குத் தெரு கலந்தர் ஆசிக், கலந்தர் மைதீன், ரஹ்மான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 350 கிலோ எடைகொண்ட ஏழு மஞ்சள் மூட்டைகள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த காவலர்கள் அதை தேவிபட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: திண்டுக்கல் கோட்டை குளத்தில் தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை