ETV Bharat / state

மக்களை ஏமாற்றும் மாந்திரீகம் - கைது செய்த காவல்துறை - tamil latest news

ராமநாதபுரம்: கமுதி பகுதிகளில் மாந்திரீகம் செய்து பூமிக்கடியில் தங்கச் சிலை எடுத்துத்தருவதாக கூறிய கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்டவை
பறிமுதல் செய்யப்பட்டவை
author img

By

Published : Apr 27, 2020, 10:37 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்துார் பகுதிகளில் மாந்திரீகம் என்ற பெயரில், பூமிக்கடியில் தங்கசிலைகள் இருப்பதாகவும், யாகம் நடத்தினால் பழமையான சிலைகள் கிடைக்கும் என, ஒரு கும்பல் மோசடி செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனடிப்படையில், கமுதி தாலுகா பேரையூர் அருகே ஆனையூரில், சில வாரங்களுக்கு முன் யாகம் நடத்தியுள்ளனர்.

மக்களை ஏமாற்றும் மாந்திரீகர்
மக்களை ஏமாற்றும் மாந்திரீகர்

அப்போது அங்கு தங்க சிலைகளுக்கு பதிலாக, பழமையான சிலைகள் கிடைத்துள்ளன. பழமையான சிலைகளை அதிக விலைக்கு விற்பனை செய்யலாம் என திட்டமிட்ட அந்தக் கும்பல், கமுதி அருகே தோப்படைபட்டியில் பூமிக்கடியில் பதுக்கி வைத்து, விற்பனை செய்ய காத்திருந்தது.

இது குறித்து ராமநாதபுரம் எஸ்பி வருண்குமாருக்கு அவரது செல்ஃபோன் வாயிலாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உதவி எஸ்.பி., விவேக், டிஎஸ்பி ராஜேஷ் (முதுகுளத்துார்), மகேந்திரன் (கமுதி), ராமநாதபுரம் தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் திவாகர் ஆகியோர் விசாரித்துள்ளனர்.

இதில், தோப்படைபட்டியில் பூமிக்கடியில் பதுக்கி வைத்திருந்த ஆறு சிலைகள், யாக பூஜையில் பயன்படுத்தப்படும் நாணயங்கள், மாந்திரீகம் செய்த தகடுகள், அலங்கார கற்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மக்களை ஏமாற்றும் மாந்திரீகம்

இது தொடர்பாக முதுகுளத்துார் செல்வக்குமார், தோப்படைபட்டியைச் சேர்ந்த புதுக்கோட்டை விஏஓ., செல்லப்பாண்டி, முருகராஜ், அருள்சாமி, ஏனாதியைச் சேர்ந்த முத்து, கீழகாஞ்சிரங்குளம் தலையாரி மகாதேவன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2ஆவது நாளாக மத்தியக் குழு ஆய்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.