கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாது சமூக ஆர்வலர்களும் ஆங்காங்கே தங்களது பகுதியில் சொந்தப் பணத்தை செலவிட்டு கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
இந்நிலையில் முதுகுளத்தூர் அருகே உள்ள பேரையூர் கிராம மக்கள் இணைந்து மினி லாரியில் ஆறு பெரிய கேன்களில் மஞ்சள்,வேப்பிலை கலந்த நீரை எடுத்துச் சென்று கிராமம் முழுவதும் தெளித்தனர்.
மேலும் கிராமத்தின் மையப் பகுதிக்கு சென்று பெண்களிடம் குடங்களில் அந்த மஞ்சள் கலந்த நீரை வழங்கினர்.
இதையடுத்து அந்தப் பெண்கள் இணைந்து கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் மஞ்சள் கலந்த நீரை தெளித்தனர். அது தவிர்த்து கிராம இளைஞர்கள் இணைந்து கிருமிநாசினி பவுடர்களையும் கிராமம் முழுவதும் போட்டனர். இவ்வாறு செய்வதன் மூலம் கரோனா வைரஸை கிராமத்தில் இருந்து தடுக்கலாம் என்று கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இதையும் படிங்க... ஓபிஎஸ் தலைமையில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை