ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நெய்வயல் கிராமத்தில் பாதைப் பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி குணசேகரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்ட நிலையில், உரிய சட்ட நடவடிக்கைகளை வருவாய்துறையினர் மேற்கொண்டனர்.
இன்று திருவாடனை தாசில்தார் மாதவன், துணைத் தாசில்தார் சேதுராமன், டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், தலைமையில் சென்று அலுவலர்கள் பாதைகளை அளந்து அகற்ற முற்பட்டனர். அப்போது அப்பகுதி மக்கள் வண்டிகளை உள்ளேவிடாமல் சாலையில் படுத்தும், அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு தடுத்து நிறுத்தினர்.
அதன்பின்னர் பொதுமக்களிடம் அலுவலர்கள் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சரிவராத நிலையில், காவல் துறையினரின் உதவியோடு பொதுமக்களை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர். பின்னர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: தற்போது பள்ளிகள் திறப்பது ஏன் சாத்தியமில்லை’ - அமைச்சர் செங்கோட்டையன் பதில்!