ETV Bharat / state

பேருந்து நிலையத்தில் பாலியல் தொழில் - கண்காணிக்க தவறியதா காவல்துறை?

ராமநாதபுரம்: பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் காத்திருப்பு அறையில் பாலியல் தொழில் நடப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து காத்திருப்பு அறையை கடையாக மாற்றிவிட்டதாக நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

ramanadhapuram bus stand
author img

By

Published : Aug 12, 2019, 10:26 AM IST

ராமநாதபுரம் பேருத்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் பேருந்து வரும் வரை காத்திருக்க இரண்டு அறைகள் உள்ளன. ஒன்று பேருந்து வெளி செல்லும் பகுதி அருகேயும், மற்றொன்று பேருந்து நிலையத்தில் உள்ள காவலர் அறைக்கு அருகே அமைந்துள்ளன. இந்த இரண்டு அறைகளும் முறையான பராமரிப்பு இல்லாமல் துர்நாற்றம் வீசி வந்தன.

ராமநாதபுரம் பேருந்து நிலையம்

இதை முறையாக பராமரிக்க நகராட்சி ஊழியர்களுக்கு இரண்டு முறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும் இரண்டு நாட்களுக்கு மேல் பராமரிப்பு பணி நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பயணிகள் காத்திருக்கும் அறை கடையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது குறித்து நகராட்சி ஆணையர் சுப்பையா கூறுகையில், இந்த காத்திருப்பு அறையில் குடிப்பது, பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் தொடந்து நடைபெறுகின்றன. இதனால் இதனை கடையாக மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.11

இரவில் பாலியல் தொழில் நடப்பதால் பேருந்து நிலைய காத்திருப்பு அறையை கடையாக மாற்றிய நகராட்சி ஆணையர், கண்காணிக்க தவறியதா காவல்துறை?

Body:இராமநாதபுரம் பேருத்து நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்கள் பேருந்து வரும் வரை காத்திருக்க இரண்டு காத்திருப்பு அறைகள் உள்ளன. ஒன்று பேருந்து வெளி செல்லும் பகுதி அருகேயும் மற்றொன்று பேருந்து நிலையத்தில் உள்ள காவலர் அறைக்கு அருகே அமைந்துள்ளது.
இந்த இரண்டு அறைகளும் முறையான பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசும் நிலையில் இருந்தது. இதை முறையாக பராமரிக்க நகராட்சி ஊழியர்களுக்கு இரண்டு முறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார். ஆனாலும் இரண்டு நாட்களுக்கு மேல் பராமரிப்பு பணி நடைபெறாது குறிப்பிட வேண்டியது.
இந்நிலையில்
காவல்நிலையம் அருகே இருந்த காத்திருப்பு அறையில் திடீரென வேலைகள் நடைபெற தொடங்கின விசாரித்த போது கடையாக மாறிவிட்டது என்று கூறுகின்றனர்.

இப்போது காத்திருக்க இருக்க இடமின்றி பயணிகள் வெயிலில் நிற்க்கும் சூழ்நிலை இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து நகராட்சி ஆணையர் சுப்பையா பத்திரிக்கையாளரிடம் கூறும் போது இந்த காத்திருப்பு அறையில் குடிப்பது, பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் தொடந்து நடைபெறுவதாகவும் தடுக்கச் சென்ற அவரையும், அந்த கும்பல் தாக்க வந்தாகவும், இதனால் அதை டெண்டரில் விட்டு தற்போது ஒருவரிக்கு வாடகை விட்டு இருப்பதாக கூறியுள்ளார். காவல் நிலையம் அருகே இந்த சம்பவங்கள் நிகழ்ந்து, இது தொடர்பாக ஆணையர் காவல்நிலையத்தில் புகார் அளித்தாரா? அல்லது குறிப்பிட்ட நபரின் வற்புறுத்தலின் பேரில் அந்த காத்திருப்பு அறையை கடையாக மாற்ற அனுமதி வழங்கியுள்ளாரா என்ற கேள்வி தற்போது பொது மக்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.