ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சியிலுள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், மாணவர்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், “நடுநிலைப் பள்ளியில் 2020ஆம் கல்வியாண்டில் 1 முதல் 5ஆம் வகுப்பில் 300 மாணவர்கள், 6 முதல் 7ஆம் வகுப்பில் 169 மாணவர்கள் என மொத்தம் 469 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இவர்களில் 15 மாணவர்கள் இந்தாண்டு 8ஆம் வகுப்பு பயின்று வருகிறார்கள். அவர்கள் வரும் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு படிப்பதற்கு ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கான எந்த அரசுப் பள்ளியும் இல்லை. அரசு அறிவித்துள்ள மருத்துக் கல்லூரிக்கான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு இந்த மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.
எனவே தாங்கள் உடனடியாக வள்ளல்பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளியை, வரும் 2021-2022ஆம் கல்வியாண்டில் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி ராமநாதபுரம் மாணவர்கள் அரசு பள்ளியில் பயின்று பயனடைய அரசுக்கு பரிந்துரைத்து செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: 11ஆம் வகுப்பு சேரணுமா? ரூ.5 ஆயிரம் கொடு: லஞ்சம் கேட்ட அரசு பள்ளி அலுவலர்கள்!