ராமநாதபுரம்: சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தந்தை, மகள் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்து சுமார் 10 கிலோ எடையுள்ள கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
பரமக்குடி எமனேஸ்வரம் கிறிஸ்தவத் தெருவைச் சேர்ந்த ரஞ்சித் குமார், ஹேமலதா என்ற பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். பரிசோதனையில் ஆறு கிலோ எடையுள்ள கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
பரிசோதனையின் போதே ரஞ்சித் குமார், அங்கிருந்து தப்பியோடினார். இதைத்தொடர்ந்து ஹேமலதாவின் வீட்டில் காவலர்கள் சோதனையிட்டனர். அப்போது 4 கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனம், 10 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஹேமலதா (31), அவரது தந்தை கருப்பையா உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
தொடர்ந்து ஹேமலதா, மலைராஜ், எபினேசர் பிரான்சிஸ் ஆகிய மூவரை கைது செய்த சார்பு ஆய்வாளர் முத்துமாணிக்கம், தொடர்ந்து மூவரிடம் விசாரணை நடத்திவருகிறார். மேலும் தப்பியோடிய ரஞ்சித்குமாரையும் காவலர்கள் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: காசிமேடு சந்தையில் குறைந்த மீன்வரத்து... ஏமாற்றத்துடன் திரும்பிய அசைவப்பிரியர்கள்