ETV Bharat / state

பரமகுடி அதிமுக எம்எல்ஏ-வுக்கு கரோனா உறுதி - அதிமுக எம்எல்ஏவுக்கு கரோனா உறுதி

Paramakudi ADMK MLA affected with COVID-19 postive
அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன்
author img

By

Published : Jul 2, 2020, 11:46 AM IST

Updated : Jul 2, 2020, 2:34 PM IST

11:40 July 02

ராமநாதபுரம்: பரமக்குடி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏ சதன் பிரபாகரன் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மக்கள் பிரதிநிதியான அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதுவரை மாவட்டம் முழுவதிலும் 952 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் 243 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மீதமுள்ள அனைவரும் பரமக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை அரசு மருத்துவமனைகளிலும் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இராமநாதபுரத்தில் கரோனா தொற்றால் 19 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதையும் படிங்க: பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு அலுவலர் ஆய்வு

Last Updated : Jul 2, 2020, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.