ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தை காக்கிநாடா துறைமுகத்திலிருந்து வந்த இரண்டு மிதவை கப்பல்கள் பாக் ஜலசந்தி வழியாக பாம்பன் ரயில் பாலத்தை கடந்து மன்னார் வளைகுடா கடல் மும்பை நோக்கிச் சென்றன.
இந்தக் கப்பல்களுக்கு பாம்பன் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மூலம் வழிநடத்திச் சென்று பாம்பன் பாலத்தைக் கடக்க உதவினர். ரயில்வே மற்றும் பாம்பன் பொறியாளர்கள் கப்பல் பாதுகாப்பாக கடந்துசெல்வதை பாலத்தில் நின்றபடி பார்வையிட்டனர்.