ETV Bharat / state

ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி வழங்கிய தலைமைக் காவலர்! - etv news

பாம்பன் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பயன்பாட்டுக்காக பாம்பன் காவல் நிலைய தலைமைக் காவலர் மற்றும் அவரின் சகோதரர் இருவரும் சேர்ந்து ரூபாய் 1.50 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவியை வழங்கினர்.

ரூ1.50 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி - காவல் நிலைய தலைமைக் காவலர்கள்!

author img

By

Published : Jun 7, 2021, 8:37 PM IST

கரோனா தொற்று பரவுவதைத் தடுக்க ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு கரோனா தொற்றை தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதுடன் ஆதரவற்ற, வறுமைக் கோடிற்கு கீழுள்ள மக்களுக்கு உணவுப் பொருள்களையும தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே பாம்பன் காவல் நிலைய தலைமைக் காவலர் முரளி செல்வம், அவருடைய சகோதரர் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து பாம்பன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூபாய் 1,50,000 மதிப்பிலான 20 லிட்டர் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி, 400 முகக் கவசங்களை மண்டபம் ஆரம்ப சுகாதார நிலைய அலுவலர் பாக்கியநாதன், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் வழங்கினார். தலைமைக் காவலரின் இச்செயலை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் வெகுவாகப் பாராட்டினார்.

இதையும் படிங்க: கரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.