ராமநாதபுரம் மாவட்டம் 22.6 ஏக்கர் பரப்பளவில் ரூ. 325 கோடி செலவில் அமைக்கப்படும் மருத்துவக் கல்லூரியின் அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெறவுள்ளது.
இதில், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்துகொள்கின்றனர். இதற்கான பிரமாண்ட மேடை, தற்காலிக சாலைகள் ஆகியவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. விழா நடைபெறும் இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாளை மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்வதால் பாதுகாப்புப் பணியில் 3,500 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சர், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் ஆகியோர்களுஜ்க்கு ஒரு வழியும், பொதுமக்கள் பயன்படுத்த மற்றொரு வழியும் ஏற்படுத்தப்படுள்ளது. விழாவில் 21 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் விதமாக இருக்கை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:'இந்தியன் அந்நியனாக மாட்டான்; அந்நியன் இந்தியனாக முடியாது'