ETV Bharat / state

பசும்பொன் தேவர் குருபூஜையில் பங்கேற்க வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தடை! - முத்துராமலிங்கத் தேவர்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கான முன்னேற்பட்டு ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டார்; அதன்பின்னர் தேவர் குருபூஜையில் பங்கேற்க பிற மாவட்டத்தினருக்கு அனுமதி இல்லை எனத்தெரிவித்தார்.

குருபூஜையில் பிற மாவட்டத்தினருக்கு அனுமதி இல்லை.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை
author img

By

Published : Oct 13, 2021, 10:06 PM IST

ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114ஆவது பிறந்தநாள் விழா மற்றும் 59ஆவது குருபூஜை தொடர்பான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்(பொறுப்பு), மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் மாவட்ட ஆட்சியர் கூறியது:-

'பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக பிறந்த நாள் விழா கொண்டாடப்படும்.

கரோனா வைரஸ் தொற்றுப்பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக, அரசு அறிவுரைகளின்படி ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன்கருதி 28.10.2021 முதல் 30.10.2021 வரை பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் ராமநாதபுரம் மாவட்டம் தவிர, பிற மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு தடை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவிற்கான முன்னேற்பட்டு ஆய்வுகளை மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) காமாட்சி கணேசன் மேற்கொண்டார்.

பதிவு பெற்ற அரசியல் கட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் (5 நபர்களுக்கு மிகாமல் மற்றும் மூன்று வாகனங்களுக்கு மிகாமல்) மாவட்ட ஆட்சியரின் முன் அனுமதி மற்றும் வாகன முன் அனுமதியைப்பெற்று குருபூஜை விழாவில் பங்கேற்கலாம்.

அரசு அறிவித்துள்ள வழிமுறைகளைப் பின்பற்றியும், உரிய சமூக இடைவெளியை கடைபிடித்தும் மரியாதை செலுத்தலாம்' என்றார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.