ETV Bharat / state

அவசர பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் - மாவட்ட ஆட்சியர்! - அவசர பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்

ராமநாதபுரம்: அவசர பயணங்களுக்கு மட்டுமே அனுமதிச் சீட்டு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

travel pass in ramanathapuram
travel pass in ramanathapuram
author img

By

Published : Apr 15, 2020, 2:36 PM IST

இந்தியாவில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இச்சூழலில் மாநில, மாவட்ட எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மருத்துவ அவசரம், இறப்பு, மகப்பேறு உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் பயணம் மேற்கொள்வோர் மாவட்ட நிர்வாகத்திடமிருந்து அனுமதிச் சீட்டு பெற்றுதான் பயணம் மேற்கொள்ள வேண்டும். அதற்கான அனுமதிச் சீட்டை பெற இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டமாக குவிந்தனர். இவர்களில் ஒரு பகுதியினர் சமூக இடைவெளியை பின்பற்றி நின்றனர். சிலர் சமூக இடைவெளி பின்பற்றாமல் நெருக்கமாக காத்திருந்தனர்.

‘2 முறை சோதனையில் இல்லை... 3ஆவது முறையில் கரோனா உறுதி’ - கீழமாத்தூருக்கு சீல்!

அப்பொழுது அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் எதற்காக இவ்வளவு பேர் இங்கு பயணச்சீட்டு வாங்க வந்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும் சிலரிடம் பயணச்சீட்டு பெற வந்ததற்கான காரணங்கள் குறித்து கேட்டபோது, பலர் தேவையற்ற முறையில் பயணச்சீட்டு கேட்டு வந்திருந்தது தெரியவந்தது.

அவசர பயணங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் - மாவட்ட ஆட்சியர்

இதனையடுத்து அலுவலர்களிடம் இறப்பு, மகப்பேறு, மிக முக்கிய மருத்துவ தேவைகளுக்காக மட்டுமே பயண அனுமதிச் சீட்டை வழங்க வேண்டுமென்றும், தேவையற்றவர்களுக்கு பயணச்சீட்டை வழங்க வேண்டாம் என்றும் தெரிவித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில் தேவையற்ற காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குவிந்து அவர்களின் கரோனா வைரஸ் பற்றிய புரிதல் இல்லாததை காட்டும் விதமாக இருப்பதாக சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.