இராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து மஞ்சள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று (அக.26) காலை ராமேஸ்வரத்தையடுத்த பாம்பன் வடக்கு கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை நாட்டுப்படகில் கடத்தப்படுவதாக கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் நாட்டுப்படகுகளை ஆய்வு செய்தனர். அப்போது அதில் ஒரு படகில் 25 மூட்டைகளில் 40 கிலோ வீதம் 1000 கிலோ மூட்டை மஞ்சள் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து மஞ்சளையும், நாட்டுப் படகையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தப்படவிருந்த மஞ்சளின் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் என காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஆக்சிஸ் வங்கி மேலாளர் பணி இடைநீக்கம்!