தமிழ்நாட்டில் 40-திற்கும் மேற்பட்ட நாள்களுக்குப் பிறகு நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு விதித்த கட்டுப்பாடுகளின்படி மது பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். அந்தவகையில், மதுபானத்தை வாங்கிய மகிழ்ச்சியில் முதியவர் ஒருவர், நடுரோட்டில் ஆடிப்பாடும் சம்பவம் ராமநாதபுரத்தில் நிகழ்ந்துள்ளது.
ராமநாதபுரத்தைப் பொறுத்தவரை மொத்தமாக 121 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், 95 கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள 26 கடைகள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், பாம்பனில் உள்ள மதுபானக் கடை முன்பு காலை முதலே மதுவாங்க காத்திருந்த மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மதுவை வாங்கிச் சென்றனர்.
அப்போது, கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், பாம்பனில் மதுவை வாங்கிவிட்டு பாட்டுப் பாடி நடனம் ஆடினார். மேலும், மது கடை திறக்க அனுமதியளித்த முதலமைச்சர் பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "எனது வாழ்நாளில் இதுபோன்ற ஊரடங்கை நான் பார்த்ததில்லை. 43 நாள்களுக்குப் பிறகு மதுவை கையில் பார்க்கும்பொழுது என் வாழ்நாளின் மிகப் பெரிய ஆனந்தம் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார். தொடர்ந்து மது பாட்டில்களுக்கு முத்தமிட்டவாறே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
இதையும் படிங்க: விஷவாயுவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி - ஆந்திர முதலமைச்சர்