ETV Bharat / state

'கொரோனா வைரஸுக்கு கனவில் வந்து மருந்து கூறிய மாசாணி அம்மன் - நம்பினால் நம்புங்கள்' - கொரோனா வைரஸுக்கு கனவில் வந்து மருந்து கூறிய மாசாணி அம்மன்

ராமநாதபுரம்: கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த மருந்து கண்டுபிடித்திருப்பதாக முதியவர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் மூலிகையுடன் மனு அளித்துள்ளார்.

old man finds medicine for coronavirus in ramanathapuram

author img

By

Published : Feb 17, 2020, 5:15 PM IST

சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் இருக்கும் மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது வரை ஆயிரக்கணக்கானோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கத் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்ற முதியவர் இன்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதாகவும், அதனை இந்திய அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுக்கு உட்படுத்தி உலக மக்களை பாதுகாக்க வேண்டி மனு ஒன்றை அளித்தார்.

இதுகுறித்து மாணிக்கத்திடம் கேட்டபொழுது பொள்ளாச்சி மாசாணி அம்மன் கனவில் வந்து இந்த மூலிகையை கூறியதாகவும் இதன் மூலம் கொரோனா வைரஸை அழிக்க முடியும் என்றும் அதனை மாவட்ட ஆட்சியரிடம் மட்டுமே காண்பிப்பேன் என்றும் தெரிவித்தார்.

பின் ஆட்சியர் வீர ராகவ ராவிடம் மாணிக்கம் மனுவையும் மூலிகையையும் ஒப்படைத்தார். அதை சுகாதாரத்துறை அலுலர்களிடம் கொடுத்து அதனை பரிசோதனைக்கு உட்படுத்த மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். திடீரென்று முதியவர் ஒருவர் வைரஸுக்கு மருந்து கண்டுபிடித்து இருப்பதாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் குறைதீர்ப்பு கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட ஆட்சியரிடம் முதியவர் மனு

இதையும் படிங்க: கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் குணமடைந்தார்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.