ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள விட்டிப்பிள்ளைப் பகுதியைச் சேர்ந்த சிறுவனுக்கு அதே பகுதியில் ஆட்டோ ஓட்டும் முத்துராமன்(52) என்பவர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்துள்ளார். அதை, அந்தச் சிறுவன் பெற்றோரிடம் கூறினார்.
இதனையடுத்து, அந்தச் சிறுவனின் பெற்றோர் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின கீழ் கைது செய்துள்ளனர்.