ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், திருவாடானை, தொண்டி, கமுதி உள்பட மாவட்டம் முழுவதும் கடந்த நான்கைந்து நாள்களாக பரவலாக விட்டு விட்டு சாரல் மற்றும் கன மழை பெய்து வருகிறது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரத்தை அடுத்த கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சோலையம்மாள் என்ற 70 வயது மூதாட்டி இன்று (நவ. 17) காலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது, வீடு மழையால் ஊறி திடீரென இடிந்து விழுந்தது.
இதில் வீட்டில் இருந்த மூதாட்டி பரிதாபமாக பலியானார். அதிர்ஷ்டவசமாக அந்த வீட்டிலிருந்த மேலும் இரண்டு பேர் வெளியில் வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுதொடர்பாக பி1 காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.