ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது 15 ஆயிரத்து 449 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்றுப் பரவலை தடுப்பதற்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் நிரந்தர தீர்வு என்று அரசு பலமுறை வலியுறுத்தியும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.
தினமும் 500க்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த சில நாள்களாக தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
நேற்று (மே 28) ஒரே நாளில் 4ஆயிரத்து 648 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனால், மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
இதையும் படிங்க: கோவாக்சின் இல்லாததால் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாத மக்கள்!