ETV Bharat / state

ஆலோசனைக் கூட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிக்கான அலுவலகங்கள் அறிவிப்பு! - ராமநாதபுரத்தில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வேட்புமனு தாக்கல் செய்யும் பகுதிக்கான அலுவலகங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில்  நடைபெற்ற  அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் வேட்புமனுவை எந்தெந்த பகுதிக்கு, எந்தெந்த அலுவலகங்ளில் தாக்கல் செய்யலாம் என தெரிவித்தார்.

author img

By

Published : Mar 11, 2021, 12:26 PM IST

ராமநாதபுரம்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் நாளை (மார்ச் 12) தொடங்கி, மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ராமநாதபுரத்தில் தொடர்பான அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச்10) ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக் உள்பட பல்வேறு துறை அலுவலர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலர் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ஆட்சியர் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய பல்வேறு இடங்களை குறிப்பிட்டார்.

ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்

அப்போது ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறுகையில், ”திருவாடானை தொகுதிக்கு மட்டும் மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் ஆகியவற்றில் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம்.

ராமநாதபுரம் சட்டப்பேரவை தொகுதிக்கு சார் ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு வழங்கலாம். பிற தொகுதிகளுக்கு வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் வேட்பு மனு வழங்கலாம். வேட்புமனு தாக்கல் செய்ய பொது வேட்பாளர் ரூ.10 ஆயிரம் ரூபாயும், பட்டியலின அல்லது பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர்கள் ரூ.5 ஆயிரம் ரூபாயும் ரொக்கமாக செலுத்தலாம். விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வேட்புமனுவை தாக்கல் செய்ய இயலாது. பிற நாள்களில் காலை 11 மணி முதல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.” என்றார்.

இதையும் படிங்க : தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021- முதன்மை தகவல்கள் உடனுக்குடன்...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.