ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தின் தென்கடல் பகுதியில் நாளை (அக்.14) வழக்கத்துக்கு மாறாக, காற்று 45-55 கி.மீ வரை வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நாளை தென் கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு, மீன்பிடி அனுமதிச் சீட்டு வழங்கப்படமாட்டாது. படகுகளைப் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தி வைக்க வேண்டும்.
நாட்டுப்படகு மீனவர்கள் நாளை கடலுக்குச் செல்ல அனுமதியில்லை. தடையை மீறி செல்லும் நாட்டுப்படகு மீனவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 800-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பசும்பொன் தேவர் குருபூஜையில் பங்கேற்க வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தடை!