ETV Bharat / state

'தமிழ்நாட்டில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை' - அமைச்சர் ராஜகண்ணப்பன் - etv news

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தடுப்பு பணிகள் குறித்துப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் 'மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை' - அமைச்சர் ராஜகண்ணப்பன் பேட்டி.

author img

By

Published : May 22, 2021, 10:09 PM IST

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட முதுகுளத்தூர், கமுதி அரசு மருத்துவமனை, சாயல்குடி ஆரம்பச் சுகாதார நிலையம், கடலாடி அரசு கலைக் கல்லூரியில் உள்ள கரோனா சிகிச்சை மையம் ஆகியவற்றில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

பின் செய்தியாளரிடம் பேசிய அவர், ராமநாதபுரம் மருத்துவமனையில் 600 படுக்கைகள் உள்ளன. அதில், 195 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 415 படுக்கைகள் காலியாக உள்ளன. பரமக்குடியில் 200 படுக்கைகளில் 92 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 108 படுக்கைகள் காலியாக உள்ளன.

கமுதி, கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் சிகிச்சைக்காக ராமநாதபுரம் செல்லும் நிலை இருந்தது, தற்போது கடலாடி அரசு கலைக் கல்லூரி நோய் தொற்று சிகிச்சை மையமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

அவ்வப்போது மின்வெட்டு பிரச்னை ஏற்படுவதாக செய்தியாளர்கள் கேட்டபோது, மின்வெட்டு என்றப் பேச்சுக்கே இடமில்லை. தமிழ்நாட்டில் அதிகப்படியான மின் உற்பத்திச் செய்யப்படுகிறது என்று பதிலளித்தார். மேலும், நிர்வாகக் காரணங்களுக்காக மின்வெட்டு இருக்குமே தவிர அனாவசியமாக மின்வெட்டு இருக்காது என்று குறிப்பிட்டார்.

மேலும், சாயல்குடி பணிமனை அமைக்கும் திட்டம் குறித்து போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வு நடத்திய பிறகு அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அதேபோல சாயல்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்துவதற்கு முதலமைச்சருடன் பேசி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் அல்லி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: புதிய சிபிஐ தலைவரை வரும் திங்களன்று தேர்வு செய்யும் பிரதமர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.