ராமநாதபுரம் மாவட்டம், முழுவதும் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக போதிய மழைப் பொழிவு இல்லாததால் வறட்சி நிலவி வந்தது. இதனால், ராமநாதபுரத்தில் உள்ள பறவைகள் சரணலாயங்களுக்கு வரும் பறவைகளின் வரத்தும் குறைந்து கொண்டே வந்தது.
சமீபமாக நல்ல மழைப் பொழிவினால் ராமநாதபுரத்தில் உள்ள ஏரி, குளம், கண்மாய் ஆகியவற்றில் நீர் நிரம்பியது. அதே போல தேர்தங்கால், சக்கரக்கோட்டை உள்ளிட்ட ஆறு சரணலாயங்களுக்குப் பறவைகள் வரத் தொடங்கியுள்ளன. அதன்படி ஆசிய, ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பறவைகள் நவம்பர் முதல் மார்ச் வரை, வலசை வந்து இங்கு தங்கி முட்டையிட்டு குஞ்சு பொரித்துச் செல்லும்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வனத்துறையினர் வேட்டை தடுப்புக் காவலர்கள் உப்பூருக்கு அருகில் உள்ள வளமாவூர் கண்மாய் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நான்கு இருசக்கர வாகனங்களில் வந்த ஐந்து நபர்கள் வனத்துறை அலுவலரைப் பார்த்து தப்பிக்க முயன்றனர். அப்போது அவர்களைப் பிடித்து சோதனையிட்டதில் அரியவகை பறவையான நீலச்சிறவி பறவைகள் மூன்று உயிருடனும் ஒன்று இறந்த நிலையிலும் மற்றும் சிறிய வலைகளும் கைப்பற்றப்பட்டன.
அதையடுத்து அந்து ஐந்து பேரைக் கைது செய்த வனத்துறை, ராமநாதபுரம் வனச்சரக அலுவலகத்திற்குக் கொண்டு வந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பறவை கடத்திய குற்றத்திற்கு அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து உயிருடன் கைப்பற்றிய நீலச்சிறவி பறவைகள் தேர்தங்கல் சரணலாயத்தில் பாதுகாப்பாகக் கொண்டு சேர்க்கப்பட்டது.
இந்த நீலச்சிறவி பறவைகள் ஐரோப்பா, மேற்கு ஆசியாவை வாழ்விடமாகக் கொண்டவை. நவம்பர் முதல் பிப்ரவரி வரை வெளிநாடுகளுக்கு இனப் பெருக்கத்திற்காகப் பறந்து செல்கின்றன. இந்தியா, பங்களாதேஷ், தெற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இவை செல்கின்றன.
இதையும் படியுங்க: