தமிழ்நாட்டின் பழமையான சிவாலயங்களில் ஒன்றாக விளங்கும் திருஉத்திரகோசமங்கை மங்களநாதர் திருக்கோயில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவபெருமான் அருள்பாலிக்கும் திருக்கோயில்களில் மிகவும் புனிதத்துவம் வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி மிகச் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு மகா சிவராத்திரியிலும் வழக்கம் போல நாட்டியாஞ்சலி கலை விழா நடைபெறுகிறது. நாளை (மார்ச்11) மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு முழுவதும் விடிய விடிய பரதநாட்டியம், குச்சிப்புடி மற்றும் இதர கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதில், ராமநாதபுரம் ராணி ராஜேஸ்வரி நாச்சியார் மற்றும் தமிழ் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். இங்கு நடைபெறும் நாட்டியாஞ்சலி விழாவில் சிவகங்கை, மதுரை, தஞ்சாவூர், சென்னை, கோயம்புத்தூர் போன்ற பல மாவட்டங்களிலிருந்து நடன கலைஞர்களும், இசைக்கலைஞர்களும் வந்து கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இதையும் படிங்க:மீன்பாடி வண்டியில் மறுவீடு: வழக்கத்தையும் தொழிலையும் மதித்து உதாரணமாக மாறிய புதுமணத் தம்பதி