சென்னை நந்தனம் தேவர் சிலையிலிருந்து பசும்பொன் வரை தேசிய தெய்வீக யாத்திரை நடத்த இருப்பதாகவும், அதற்காக இன்று (ஜனவரி 2) பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவாலயத்தில் திருவாடனை எம்எல்ஏ கருணாஸ் துளசிமாலை அணிந்து சிறப்பு வழிபாடு செய்தார்.
பின்னர் செய்தியார்களிடம் கூறியதாவது, "மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சமூகங்களை ஒன்றிணைத்து தேவர் என்ற அரசாணை வெளியிட வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அக். 30ஆம் தேதி நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும்.
பசும்பொன் தேவர் நினைவுக் கல்லூரியில் நிரந்தர நிர்வாக கமிட்டி அமைக்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்னும் ஓரிரு வாரங்களில் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலையில் இருந்து பசும்பொன்னை நோக்கி தேசிய தெய்வீக யாத்திரை முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று மேற்கொள்ளப்படும்.
வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரண்டு சீட்டுக்களை முதலமைச்சரிடம் கேட்க உள்ளேன். பாஜகவில் இருந்து தனக்கு அழைப்பு வருகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'அன்னை தெரசா உயிருடன் இருந்திருந்தால் முதலமைச்சரை வாழ்த்தியிருப்பார்' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்