ETV Bharat / state

டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் - 40 பேர் கைது - டாஸ்மாக் கடை

ராமநாதபுரம்: டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி டாஸ்மாக் கடையை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ntkprotsest1
author img

By

Published : Aug 5, 2019, 8:28 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் கடைகளால் பெண்கள், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக தொடர்ச்சியாக புகார் எழுந்து வந்தது.

இதையடுத்து, இக்கடைகளை அகற்றக்கோரி கீழக்கரை பொதுமக்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர்.

அக்கட்சியின் மண்டல செயலாளர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 40க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயற்சித்த நிலையில், அவர்கள் ஒத்துழைக்காததால் 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.4

கீழக்கரையில் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி முற்றுகை, நாம் தமிழர் கட்சியினர் 40 பேர் கைது.Body:
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் கடைகளால் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. இக்கடைகளை அகற்றக்கோரி கீழக்கரை பொதுமக்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர்
பத்மநாபன் தலைமை வகித்தார்
40க்கும் மேற்பட்ட கட்சியினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்த முயற்சித்தனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்காததால், 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.