ETV Bharat / state

காதல் திருமணம் செய்த இளைஞரின் தாய் வெட்டிக்கொலை - பெண்ணின் தந்தை கைது - ramanathapuram love story

காதல் திருமணம் செய்த இளைஞரின் தாயை, பெண்ணின் தந்தை வெட்டிக்கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

Murder of the mother of a young man who married for love and  the girls father arrested

author img

By

Published : May 22, 2022, 6:08 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகே தனது மகளைக் காதலித்து திருமணம் செய்ததால், இளைஞரின் அம்மாவை வெட்டிக்கொலை செய்த பெண்ணின் தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்த அபிராமம் அருகே உள்ள கிழக்கு அபிராமம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா (20). இவரை அதே கிராமத்தைச்சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினீத் (24) என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த சூழ்நிலையில், பெண்ணின் தந்தை கண்ணாயிரம் என்பவர், ஆத்திரத்தில் வினீத்தின் தாய் ராக்கு (53) என்பவரை அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்தார்.

இந்தச்சம்பவம் குறித்து கமுதி டிஎஸ்பி மணிகண்டன், அபிராமம் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த பெண்ணின் உடலைக்கைப்பற்றி உடற்கூராய்வு கமுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அபிராமம் போலீசார் கண்ணாயிரத்தைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: காதல் விவகாரம்: நெல்லையில் அரசியல் பிரமுகர் கழுத்தறுத்து கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.