ETV Bharat / state

முதுகுளத்தூர் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது: மேலும் 2 ஆசிரியர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை - Mudukulathur private school teacher arrested in pocso: 2 more teachers under investigation

முதுகுளத்தூர் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் இரண்டு ஆசிரியர்களை ரகசிய இடத்தில் வைத்து காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.

முதுகுளத்தூர் தனியார் பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது

author img

By

Published : Jun 24, 2021, 7:31 PM IST

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றிய ஹபீப் முகம்மது (38) என்பவர் பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் காவல் துறையினர் விசாரணையில் ஹபீப் முகமது கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்
முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் மேலும் இரண்டு ஆசிரியர்களை விசாரணைக்கு எடுத்தனர்.

அவர்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் லயோலோ இக்னேசியஸ் தலைமையிலான காவல் துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்துவருகின்றனர்.

மேலும் கைதுசெய்யப்பட்ட ஹபீப் முகம்மது பாடம் நடத்திய மாணவிகள் 20-க்கும் மேற்பட்டோரை ரகசிய இடத்திற்கு வரவழைத்து விசாரணையில் ஈடுபட்டதாகத் தெரியவருகின்றது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.