ETV Bharat / state

கடலில் மாயமாகும் மீனவர்களை கண்டுபிடிக்க எம்.பி புதிய கோரிக்கை - navas kani

ராமநாதபுரம்: கடலில் மீன்பிடிக்கும்போது மாயமாகும் மீனவர்களை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எம்.பி நவாஸ் கனி கோரிக்கை வைத்துள்ளார்.

எம்.பி நவாஸ் கனி
author img

By

Published : Jul 14, 2019, 7:12 PM IST

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 4ஆம் தேதி அதேப் பகுதியைச் சேர்ந்த அந்தோணி, மியோன், வின்தாஸ், ஸ்டீபன் ஆகிய நான்கு மீனவர்கள் பைபர் படகு மூலம் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் நான்குபேரும் மாயமாகினர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு அந்தோணி, ஸ்டீபன் கரை திரும்பிய நிலையில், மற்ற இருவரும் சடலமாக கரை ஒதுங்கினர்.

எம்.பி நவாஸ் கனி செய்தியாளர்கள் சந்திப்பு

இதையறிந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி இறந்தவர்களின் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு மட்டுமல்லாமல், ரூ.50 ஆயிரம் நிதியுதவியும் அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், ”கடலில் மூழ்கி உயிரிழந்த இரண்டு மீனவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். மேலும் இதுபோல் கடலில் மாமாகும் மீனவர்களை செயற்கை கோள் உதவியுடன் பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Intro:இராமநாதபுரம்
ஜூலை.14

மீனவர்கள் கடலில் மாயமாகும் போது செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி.

Body:இராமநாதபுரம் மாவட்ட
பாம்பன் மீன்பிடிதுறைமுகத்தில் இருந்து பைபர் படகு மூலம் கடந்த 4ம் தேதி காலை அந்தோணி, மியோன், வின்தாஸ் மற்றும் ஸ்டீபன் ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர், இவர்கள் இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது காற்றின் வேகம் காரணமாக மீனவர்கள் மாயமாகியுள்ளனர். இதில் இரண்டு மீனவர்கள் மட்டும் 4நாட்களுக்கு பின் கரை திரும்பிய நிலையில் மியோன், வின்தாஸ் ஆகிய இரண்டு மீனவர்களின் உடல் நேற்று முன்தினம் கரை ஒதுங்கியது.

இந்நிலையில் ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி உயிரிழந்தவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஐம்பதாயிரம் வழங்கினார். மேலும் தமிழக அரசு இழப்பீடாக அவர்களுக்கு 10 லட்சம் வழங்க வேண்டும், அவர்களது குடும்பத்திற்கு அரசு பணி கல்வி உள்ளிட்ட உதவிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் மீனவர்கள் இதுபோன்ற மாயமாகினால் அவர்களை செயற்கைக்கோள் உதவியுடன் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.