ETV Bharat / state

உலக தாய்ப்பால் வாரம்: தாய்மார்கள் தனமாக வழங்க முன்வரவேண்டும்..! - தாய்ப்பால் தானம் கொடுக்க வேண்டும்

ராமநாதபுரம்: உலக தாய்ப்பால் வாரம் என்பதால் தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக வழங்க முன் வர வேண்டும் என்று தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

BREAST FEEDING WEEK
author img

By

Published : Aug 6, 2019, 1:39 AM IST

உலகம் முழுவதும் ஆகஸ்ட் முதல் வாரம், உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட 14 இடங்களில் தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. அதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த ஆண்டு மே 18ஆம் தேதி முதல் தாய்ப்பால் வங்கிசேவை தொடங்கப்பட்டது. இதில் 87 தாய்மார்கள் தங்களது தாய்ப்பாலை தானமாக வழங்கினர்.

BREAST FEEDING WEEK  DOCTOR ADVISE  உலக தாய்ப்பால் வாரம்  தாய்ப்பால் தானம் கொடுக்க வேண்டும்  ராமநாதபுரம்
தாய்ப்பால் தானம் கொடுக்க மருத்துவர் அறிவுரை

அதே போல் இந்த ஆண்டில் 112பேர் தாய்ப்பாலை தானமாக அளித்துள்ளனர். ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இயங்கி வரும் தாய்ப்பால் வங்கியில் இதுவரை 199 தாய்மார்களிடம் இருந்து 20ஆயிரத்து320 மில்லி லிட்டர் தாய்ப்பால் தானமாக பெறப்பட்டுள்ளது. இதில் 19ஆயிரத்து530 மில்லி லிட்டர்,தாய்ப்பால் 132 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தாய்ப்பால் வங்கியின் மூலம் பெறப்படும் தாய்ப்பாலில் உள்ள பாக்டீரியாக்கள் நீக்கப்படுவதற்கு முதலில் கொதிக்க வைக்கப்படுகிறது.

உலக தாய்ப்பால் வாரம்

பின்னர் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு அதில் கிருமிகள் இல்லை என்று உறுதியான பிறகு அது குழந்தைகளுக்கு தேவைக்கு ஏற்ப வழங்கப்படுகிறது. தாய்ப்பால் தானமாக வழங்கும் தாய்மார்கள் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை காட்டிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் குறைவாகவே உள்ளது. எனவே வரும் காலங்களில் தாய்மார்கள் தாய்ப்பாலை தானமாக வழங்க முன் வர வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாய்ப்பாலை தானமாக வழங்குவதன் மூலம் தாயிடம் பால் இல்லாத குழந்தைகளுக்கு அந்த பால் கிடைக்கும் என்றும், அதே போல் ஆதரவற்று பிறக்கும் குழந்தைகளுக்கும் இந்த பால் வழங்கப்படும் என்றும் கூறினர்.

Intro:இராமநாதபுரம்
ஆக்.5

இராமநாதபுரத்தில் இதுவரை 199 பேர் மட்டுமே தாய்ப்பால் தானமாக அளித்துள்ளனர். தாய்ப்பால் தானமாக வழங்க பெண்கள் முன்வர வேண்டும் என மருத்துவர்கள் கருத்து.

Body:இராமநாதபுரத்தில் இதுவரை 199 பேர் மட்டுமே தாய்ப்பால் தானமாக அளித்துள்ளனர். தாய்ப்பால் தானமாக வழங்க பெண்கள் முன்வர வேண்டும் என மருத்துவர்கள் கருத்து.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.