ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நாச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கணேசன்-சுகன்யா தம்பதி. இருவருக்கு மூன்று வயதில் நிஷான்கா என்ற பெண் குழந்தையும் ஒரு வயதில் சாய் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர்.
இந்நிலையில், தம்பதிக்கிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதற்கிடையில் நேற்று (அக். 16) ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்த சுகன்யா இரண்டு குழந்தைகளையும் நாச்சியந்தேல் கிராமத்தில் உள்ள குளத்தில் மூழ்கடித்து கொலைசெய்துள்ளார்.
தொடர்ந்து அவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். அப்பெண்ணின் உறவினர்கள் சுகன்யா மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு கணேசன்தான் காரணம் என்றும் காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமான கணேசனையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: இராமநாதபுரத்தில் 2 குழந்தைகளை கொலை செய்த தாய் கைது!