ETV Bharat / state

ராமநாதபுரத்தில் நடைபெற்ற குருப்-1 தேர்வில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் இருந்து மொத்தமாக 4464 பேர் இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அதில் பாதிக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற குருப்-1  தேர்வு

author img

By

Published : Jan 3, 2021, 4:37 PM IST

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மாற்றப்பட்ட புதிய விதிமுறையுடன், புதிய பாடத்திட்டத்துடன் குரூப்-1 பணிக்கான தேர்வு இன்று (ஜன.03) தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி), துணை ஆட்சியர் 18 பணியிடங்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 19 பணியிடங்கள், வணிகவரி உதவி ஆணையர் 10 பணியிடங்கள், துணை பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் 14 இடங்கள், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 4 பணியிடங்கள், தீயணைப்பு, மீட்பு துறையில் மாவட்ட அலுவலர் பணியிடம் ஒன்று என 66 பணியிடங்களுக்கு 2020 ஜனவரி 20ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்தப் பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று (ஜன.03) நடைபெற்றது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 401 ஆண்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 825 பெண்களும்,11 திருநங்கைகளும் விண்ணப்பித்தனர்.

இந்த தேர்வானது, 32 மாவட்ட தலைநகரங்களில் 856 தேர்வு மையங்களில் இன்று (ஜன.03) நடைபெற்றது. இந்தத் தேர்வில் புதிய நடைமுறை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. புதிய நடைமுறை, பாடத்திட்டத்தின்படி முதல் முறையாக தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேர்வு  மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற குருப்-1 தேர்வில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்கவில்லை. மாவட்டம் முழுவதிலுமிருந்து மொத்தமாக 4464 பேர் இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். 16 இடங்களில் தேர்வு மையங்களில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன, இன்று (ஜன.03) நடைபெற்ற தேர்வில். மொத்தமாக 2418 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதாவது விண்ணப்பித்தவர்களில் 54% பேர். இதில் 2046 பேர் குருப் 1 தேர்வு எழுத வரவில்லை.

மேலும், தேர்வு நடைபெற்ற மகளிர் கலைக்கல்லூரி, செய்யது அம்மாள் மெட்ரிக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார். தேர்வு நிறைவடைந்த பிறகு விடைத்தாள்கள் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவல் துறையினர் பாதுகாப்பில் வைக்கப்படும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: குரூப்-1 தேர்வு: நேரில் ஆய்வு செய்த டிஎன்பிஎஸ்சி செயலாளர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.