ETV Bharat / state

‘அமைச்சர் மணிகண்டன் பதவி பறிபோனதற்கு நானும் ஒரு காரணம்’ - எம்எல்ஏ கருணாஸ்

ராமநாதபுரம்: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு நானும் ஒரு காரணம் என்று எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Aug 14, 2019, 11:49 PM IST

கருணாஸ்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் கருணாஸ் அம்மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திருவாடனை தொகுதிக்குட்பட்ட 22 கண்மாய்களில் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சில கட்சி பிரமுகர்கள் பணம் கேட்பதாக புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன்" என தெரிவித்தார்.

முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கம் குறித்த கேள்விக்கு, "அமைச்சர் மணிகண்டன் அவரின் செயல்பாடினாலே நீக்கப்பட்டுள்ளார். ஒரு அமைச்சரின் நீக்கத்தை அம்மாவட்டத்தின் அதிமுகவினர் மகிழ்ச்சியடைந்தது வேதனைக்குரிய விஷயம். மற்றவரின் துன்பத்தில் சந்தோஷம் கொள்ளும் மனநிலை எனக்கு இல்லை.

எம்எல்ஏ கருணாஸ் பேட்டி

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருவாடனை தொகுதியில் என்னை பணியாற்ற விடாமல் தடுப்பதாக முதலமைச்சரிடம் நேரடியாக குற்றம் சாட்டிய ஒரே நபர் நான் தான், அதனால் அவர் பதவி பறிபோனதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம்" என கூறினார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்ட பிறகு திருவாடனை தொகுதிக்கு கருணாஸ் வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:இராமநாதபுரம்
ஆக்.13

முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக நேரடியாக குற்றம் சாட்டியது நான் மட்டுமே திருவாடனை எம்எல்ஏ கருணாஸ் பேட்டி.

Body:ராமநாதபுரம் திருவாடானை சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் இன்று மாவட்ட ஆட்சியரை 15 நாட்களில் இரண்டாவது முறையாக சந்தித்து மனு ஒன்றை அளித்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ் தெரிவித்ததாவது திருவாடனை தொகுதிக்குட்பட்ட 22 கண்மாய்களில் குடி மராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சில கட்சி பிரமுகர்கள் பணம் கேட்பதாகவும் புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணமாக இருப்பதாக இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அதில் மனு அளித்ததாக கருணாஸ் தெரிவித்தார்.

முன்னாள் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் பதவி நீக்கம் குறித்த கேள்விக்கு நீக்கப்பட்ட அமைச்சர் மணிகண்டன் அவரின் செயல்பாடினாலே நீக்கப்பட்டு இருப்பதாகவும் ஒரு அமைச்சரின் நீக்கத்தை அந்த மாவட்டத்தில் இருக்கும் அதிகாரிகள் கட்சியினர் வெடி வெடித்துக் கொண்டாடுவது வேதனைக்குரிய விஷயம் என்றும் மற்றவரின் துன்பத்தில் சந்தோஷம் கொள்ளும் மனநிலை எனக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார். மல்லாக்கப் படுத்து எச்சில் உமிழ்ந்தால் நம் மீதே விழும் என்றும் கூறினார்

மேலும் ஒரு அமைச்சர் பொறுப்பு என்பது கௌரவ பொறுப்பல்ல அடிதட்டு மக்களுக்கு தொண்டாற்றும் கடமை உள்ளது. தவறும் பட்சத்தில் இது மாதிரியான நடவடிக்கைகள் உட்படுத்தப் படுவர் என்றும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னால் நீக்கப்பட்டு இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. ஆனால் நானும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறினார்.
தொகுதியில் என்னை பணியாற்ற விடாமல் தடுப்பதாக முதல்வரிடம் நேரடியாக குற்றம் சாட்டிய ஒரே நபர் நான் தான் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். வரவிருக்கும் நாட்களில் தொகுதிக்கு தேவையான நல்ல விஷயங்களை செய்யவிருப்பதாகவும் குடிமராமத்து பணிகளை நேரில் ஆய்வு மேற்கொள்ள இருப்பதாகவும் பள்ளி கல்லூரிகளில் வழங்கப்படாமல் இருக்கும் மடிக்கணினி வழங்கப்பட இருப்பதாகவும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் வாரங்களில் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்திருந்தால் கண்டிப்பாக அமைச்சர் பதவியை தனக்கு கிடைத்திருக்கும் என்றும் ஆனால் அவர் தற்போது இல்லை அது குறித்து நான் பேச இயலாது. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நீக்கப்பட்ட பிறகு திருவாடனை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் ராமநாதபுரத்திற்கு வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.