ராமநாதபுரத்தில் 15 வயது சிறுமியை, அந்தச் சிறுமியின் உறவினர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதையறிந்த பெற்றோர் அந்த இளைஞருக்கே சிறுமியை திருமணம் செய்துவைத்ததாகக் கூறப்படுகிறது.
சில நாள்களுக்கு முன்பு பரமக்குடி அரசு மருத்துவமனையில் அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து பரமக்குடி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞர், அவரது தாய், சிறுமியின் பெற்றோர் ஆகிய நான்கு பேர் மீதும் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர். இதையறிந்த நால்வரும் தலைமறைவாக உள்ள நிலையில், காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறு: குழந்தையைக் கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டுத் தற்கொலை