ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா நோயளிகளுக்கு முறையாக உணவு, மருத்துவம் போன்றவற்றை அளிக்கவில்லை என, பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறிய நிலையில், முதுகுளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சருமான ராஜகண்ணப்பன் நேற்று (மே.15) ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளின் உறவினர்கள், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமைச்சரிடம் வைத்தனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் அனைத்தும் உடனடியாக சரிசெய்ய அறிவுறுத்தினார். மேலும், கரோனா வார்டில் இருக்கும் நோயாளிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசி குறைகளை கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது ராமநாதபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பரமக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் முருகேசன், திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கருமாணிக்கம், முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுந்தர்ராஜன், கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திக், மருத்துவக் கல்லூரி முதல்வர் அல்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் உறவினர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு!