ETV Bharat / state

குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை சரிசெய்யப்படும் - அமைச்சர் கே.என். நேரு

ராமநாதபுரம்: குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை சரிசெய்யப்படும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை சரிசெய்யப்படும்

author img

By

Published : Jun 15, 2021, 11:03 AM IST

ராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் கிராமத்தில் கடல்நீரை நன்னீராக்கும் பிளான்ட்டை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு, போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது, "ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை குறித்து முதலமைச்சருக்குத் தொடர்ச்சியாகப் புகார்கள் வந்தன. அவரது அறிவுறுத்தலின்பேரில் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ஆய்வுசெய்யும் பணி நடைபெற்றுவருகிறது.

குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை சரிசெய்யப்படும்

காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. அதனை சீரமைத்து குடிநீர் வழங்கப்படும். சாயல்குடியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் பழைய தொழில்நுட்பமாக உள்ளது.

இதற்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 130 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்படும்.

குதிரை மொழியில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டப்பணி நடைபெற்றுவருகிறது. குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் பற்றாக்குறை சரிசெய்யப்படும்" என்றார்.

இதையும் படிங்க: உணவின்றித் தவிக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.