ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோயிலில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், குடும்பத்துடன் சாமி தரிசனம்செய்தார்.
தொடர்ந்து செய்தியாளரைச் சந்தித்த அமைச்சர், "கடந்த 10 ஆண்டுகள் அதிமுக செய்த ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறை ஊழல் நிறைந்த துறையாக மாறிவிட்டது. எதற்காக நிதி ஒதுக்கப்பட்டதோ அதைச் செயல்படுத்தாமல் இருந்துள்ளனர்.
அதனைப் போக்கும்வகையில் தற்போது முதலமைச்சர் நல்ல திட்டங்களை கிராமங்களுக்கு கொண்டுசென்று செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளார். கச்சத்தீவை மீட்பதாக திமுக தேர்தல் அறிக்கையில் திமுக தலைவர் கூறியதைப்போல கச்சத்தீவை மீட்பதற்கான முயற்சிகளையே நிச்சயமாக திமுக அரசு எடுக்கும்" என்றார்.
இதையும் படிங்க: 'மேகேதாட்டு... கர்நாடக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க வேண்டும்'