ETV Bharat / state

ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டம்... பார்வையிட்ட மருத்துவக் குழு!

ராமநாதபுரம்: புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய மருத்துவத் துறை இயக்குநர் குழு ஆய்வு செய்தனர்.

author img

By

Published : Nov 23, 2019, 9:00 PM IST

மருத்துவத் துறை இயக்குநர் குழு ஆய்வு

தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான உத்தரவை மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, 345 கோடி ரூபாய் செலவில் ராமநாதபுரத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமையவுள்ளது. இதற்காக பாரதி நகர் டி பிளாக் அம்மா பூங்கா அருகே 22 ஏக்கரில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டப்படவுள்ளது.

மருத்துவத் துறை துணை இயக்குநர் டாக்டர் சபிதா தலைமையிலான குழு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனை பகுதிகளையும், அதனைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மற்றும் தங்கும் விடுதி அமையவுள்ள அம்மா பூங்கா பின்புறம் உள்ள பகுதிகளையும் பார்வையிட்டனர்.

மருத்துவத் துறை இயக்குநர் குழு ஆய்வு

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை துணை இயக்குநர் சபிதா, "ராமநாதபுரத்தில் புதிதாக அமையவுள்ள மருத்துவக் கல்லூரி தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக இங்கு வந்துள்ளோம். இங்கு மருத்துவக் கல்லூரி அமைக்கத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் 12 ஆயிரம் சதுர மீட்டர் இடம் இருப்பதால், அதில் தேவையான கட்டுமான பணிகளைச் செய்வோம். இதுதவிர மருத்துவக் கல்லூரி, தங்கும் விடுதிகள் உள்ளிட்டவை அம்மா பூங்கா அருகே அமைய இருக்கிறது. அதற்கான பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது

Intro:இராமநாதபுரம்
நவ.23
இராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்கான இடத்தை தேர்வு மருத்துவ இயக்குனரக சிறப்பு குழுவினர் ஆய்வு.
Body:தமிழகத்தில் 6 மாவட்டங்களில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான உத்தரவை மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து 345 கோடி ரூபாய் செலவில் இராமநாதபுரத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்கவுள்ளதாகவும், இதற்காக பாரதிநகர் டி பிளாக் அம்மா பூங்கா அருகே 22 ஏக்கரில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது. மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான இடத்தை மருத்துவத் துறை துணை இயக்குனர் டாக்டர் சபிதா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இன்று மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைய உள்ள ராமநாதபுரம் அரசு மருத்துவமனை பகுதிகளையும், அதனைத்தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மற்றும் தங்கும் விடுதி அமைய உள்ள அம்மா பூங்கா பின்புறம் உள்ள பகுதிகளை பார்வையிட்டனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேசிய மருத்துவதுறை துணை இயக்குனர் சபிதா இராமநாதபுரத்தில் புதிதாக அமைய உள்ள மருத்துவக் கல்லூரி ஆய்வினை மேற்கொள்வதற்காக இன்று வந்துள்ளோம். மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அமைக்கப்படுகிறது.
அதற்கான மருத்துவமனையை ஆய்வு செய்ததில் மருத்துவக்கல்லூரி அமைக்கத் தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.
மேலும் இந்த மருத்துவமனை வளாகத்தில் 12 ஆயிரம் சதுர மீட்டர் இடம் இருக்கிறது.
அதில் தேவையான கட்டுமான பணிகளை செய்வோம்.
இதுதவிர மருத்துவக்கல்லூரி மற்றும் தங்கும் விடுதி அம்மா பூங்கா அருகே அமைய இருக்கிறது அதற்கான பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தோம் என்றார்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.