ETV Bharat / state

ராமநாதசுவாமி, ஸ்ரீ பர்வதவர்த்தினி தேவி பஞ்ச மூர்த்திகளுடன் திருத்தேரில் பவனி - ராமநாதசுவாமி திருக்கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடந்தது.

ராமநாதபுரம் திருக்கோயிலில் தேரோட்டம்
ராமநாதபுரம் திருக்கோயிலில் தேரோட்டம்
author img

By

Published : Mar 13, 2021, 7:27 AM IST

தென் இந்தியாவின் காசியான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு புனித பயணம் சென்று கோயிலுக்குள்ளும், கோயிலுக்கு வெளியிலும் அமைந்துள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் பக்தர்கள் நீராடி ராமநாதசுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசிக்கின்றனர். இதனால், பாவங்கள் அனைத்தும் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ராமநாதசுவாமி திருக்கோயில்
ராமநாதசுவாமி கோயிலில் மாசி மாதத்தில் மகா சிவராத்திரியும், ஆடி மாதத்தில் திருக்கல்யாணமும், தைப்பூசத்தில் லட்சுமண தீர்த்தத்தில் தெப்பத் திருவிழாவும் முக்கியமான திருவிழாக்கள் ஆகும்.
அந்த வகையில், இந்தாண்டிற்கான சிவராத்திரி திருவிழா மார்ச் 4இல் தொடங்கி மார்ச் 15ஆம் தேதிவரை நடைபெறுகிறது. நேற்று (மார்ச் 12) சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதசுவாமி, ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் இரண்டு திருத்தேரில் பவனி வந்தனர். இந்தத் தேரை உள்ளூர், வெளியூர் பக்தர்கள் நான்கு ரத வீதிகளில் வடம்பிடித்து இழுத்தனர்.

திருவிழாவின் முக்கிய விழாவாக இன்று (மார்ச் 13) அமாவாசை தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இதையும் படிங்க: மகா சிவராத்திரியொட்டி பனிலிங்க சிறப்பு வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.