ETV Bharat / state

வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனிக்கு வீர் சக்ரா விருது - வீர் சக்ரா விருது சமீபத்திய செய்திகள்

இராமநாதபுரம்: லடாக்கில் வீர மரணமடைந்த ராணுவ வீரர் பழனிக்கு ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Havildor palani
ராணுவ வீரர் பழனி
author img

By

Published : Jan 26, 2021, 10:15 PM IST

கடந்தாண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இராமநாதபுரம், கடுக்கலூரைச் சேர்ந்த ஹவில்தார் பழனி உள்ளிட்ட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

வீரமரணமடைந்த பழனியின் உடல் சொந்த கிராமத்திற்குக் கொண்டுவரப்பட்டு மத்திய- மாநில அரசுகள் சார்பில் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள், தன்னார்வலர்கள் பழனியின் குடும்பத்திற்கு நிதியுதவி அளித்து ஆதரவாக இருந்தனர்.

தமிழ்நாடு அரசு 20 லட்சம் ரூபாய் நிவாரணமும், வீரர் பழனியின் மனைவிக்கு இராமநாதபுரம் மாவட்ட வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர் பணியும் வழங்கியது. இந்நிலையில் வீரமரணம் அடைந்த வீரர் பழனிக்கு ராணுவத்தின் உயரிய விருதான வீர் சக்ரா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதி தேவி, ’இந்த விருது எனது கணவரின் வீர தீரச் செயலுக்கும், தியாகத்திற்கும் கிடைத்த மரியாதை. நாட்டிற்காக அவர் செய்த சேவைக்குக் கிடைத்த இவ்விருதை பெரிய அங்கீகாரம். அவரது தியாகத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன.

மத்திய, மாநில அரசுகளுக்கும், எனது கணவர் பணியாற்றிய 81 ஃபீல்ட் ராணுவப் பிரிவின் கமாண்டிங் ஆபீஸர் அஜய் மற்றும் விருது வழங்க வேண்டும் எனக் கடிதம் எழுதிய நல்ல உள்ளங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

இதையும் படிங்க:ஆசையாகக் கட்டிய வீட்டை பார்க்க முடியாமல் நாட்டிற்காக உயிர்நீத்த பழனி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.